சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் சார்பில் மகளிருக் கான தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆன்லைன் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியுடன் டிஜிட்டல் வர்த்தக வாய்ப்புகள், மத்திய, மாநில அரசின் திட் டங்கள், வாழ்வியல் முறைக்கு தேவையான மருத்துவ குறிப்புகளும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு மணப்பெண் புடவை அலங்கார பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. புடவை கட்டுவதற்கு முன்பே பாக்ஸ் போல்டிங் செய்வது எப்படி? என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெண்கள் இதனை ஒரு தொழிலாக செய்து வருமானம் பெறலாம். எனவே, அனைத்து மகளிரும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/online-training-on-bridal-saree-draping-organized-by-the-women-entrepreneurs-welfare-association-is-taking-place-today




