இதுவரை பல படங்கள் ஸ்பைடர்மேன் சீரிஸ்-ல் வந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டில் 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' என்ற படம் வெளியானது. 5 ஆண்டு இடைவெளியில் 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' என்ற படம் தயாராகி இருக்கிறது. ஸ்பைடர் மேனாக இருக்கும் டாம் ஹாலண்ட் (பீட்டர் பார்க்கர்) தன்னை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் மக்களிடம் இருந்து மறைத்து புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். தனது நண்பர்களுக்கும், காதலி ஜெண்டயாவுய்க்கும் (எம்.ஜே.) மட்டும் தன்னை பற்றிய உண்மைகளை, தன்னை பற்றிய நினைவுகளை தெரியப்படுத்த நினைக்கிறார். இதற்கிடையில் சாடி சிங்க்ஸ் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் சில அபாயங்களை, தீய விளைவுகளை நகரில் அரங்கேற்றுகிறார். இந்த சூழலில் ஜெண்டயாவின் புதிய காதல் தெரியவர, டாம் ஹாலண்ட் மனம் வெறுக்கிறார். மனம் வெறுத்து போயுள்ள டாம் ஹாலண்டை சாடி சிங்க்ஸ் வசியம் செய்கிறார். அதன் பிறகு என்ன ஆனது? டாம் ஹாலண்டின் கதி என்ன? ஸ்பைடர் பயணம் தொடர்ந்ததா, முடிந்ததா? என்பதே பரபரப்பான மீதி கதை. பீட்டர் பார்க்கராக டாம் ஹாலண்ட் துருதுரு நடிப்பை காட்டி வியக்க வைக்கிறார். காதலுக்காக அவர் செய்யும் சாகசங்கள் வழக்கம்போல கலக்கல். எம்.ஜே.வாக வரும் ஜெண்டயாவும் போட்டிபோட்டு நடித்துள்ளார். வில்லியாக வரும் 'வசியக்காரி' சாடி சிங்க்ஸ் மிரட்டியுள்ளார். '7-ஆம் அறிவு' படத்தில் வரும் டாங்லியின் லேடி வெர்ஷனோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிராண்டன், ஜேக்கப் படலோன், ஜோன் பெர்னல், மைக்கேல் மிண்டோ, லூக்காஸ் உள்பட பலரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். பிரெட் பவால்க்கின் ஒளிப்பதிவு மிரட்டல். மைக்கேல் கியாசினோ இசை படத்துக்கு உயிர். ஜீன் வசியம் செய்யும் காட்சிகள், ஹல்க் உடன் சண்டைக்காட்சி, நிஞ்சா பைட் என அதிரடியான காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் பொறுமையை சோதித்துவிட்டார்கள். கிரிஸ் மெக்கன்னா, எரிக் சோமர்ஸ் எழுதியுள்ள இந்த கதையில் பிரமாண்டம் கொஞ்சம் கூட குறையாமல் ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து வைத்திருக்கிறார், இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். கிளைமேக்ஸ் பிரமிப்பு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/movie-review/thrilling-action-mesmerizing-climax-spider-man-brand-new-day-review




