சென்னை, ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தேசத்திற்கும் பெருமை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கு 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ள நம் வீராங்கனைகளின் இந்த வரலாற்று சாதனை ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. வெற்றிகள் தொடர வாழ்த்துகள் குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த இளம் வீராங்கனை ஜி. கமாலினி இந்திய அணியின் அங்கமாக திகழ்வது தமிழகத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அவரது திறமை, உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பல இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கமாக அமையட்டும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-gold-congratulations-to-indian-womens-cricket-team-from-nainar-nagendran




