இஸ்லாமாபாத் சமீப காலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது பாகிஸ்தான். தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் ரூ.95,000 கோடி நிதி உதவி கோரியுள்ளது. பாகிஸ்தானின் நாணயம் சுமார் ரூ.95,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் திட்டத்துக்கான கோரிக்கை அமெரிக்க கருவூலத் துறையிடம் சமர்ப்பிக்கபட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து இதுவரை எந்த இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் அவர் கூறினார். இந்த நிதியானது வழக்கம் போல் கடன் வரிசையில் இல்லாமல் மாறாக, பாகிஸ்தானின் நாணயம் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் பாகிஸ்தானின் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஆதரவு நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் விளக்கம் அளித்தார். திவால் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. 2023-ம் ஆண்டு அந்த நாடு திவால் நிலைக்கு செல்லும் அபாயத்தை எதிர்கொண்டது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் உதவியுடன் நெருக்கடி சமாளிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட 7 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. எதிர்பார்க்கபடுகிறது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் அவசர நிதியுதவியை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, சர்வதேச சந்தைகளில் தன்னம்பிக்கையுடன் நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த ரூ.95,000 கோடி கடன் கோரிக்கை பார்க்கப்படுகிறது. தங்களது கடன் மதிப்பீடு உயர்ந்தால் சர்வதேச சந்தைகளில் குறைந்த வட்டியில் நீண்டகால கடன்களை பெற முடியும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. கடன் கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவிடம் இருந்து செப்டம்பர் இறுதிக்குள் பதில் கிடைக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/pakistan-seeks-rs-95000-crore-loan-from-us-why-this-huge-amount



