பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. அம்மன் தேரோட்டம் திருவிழாவின் 8-ம் நாளான ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்றிரவு ஶ்ரீபர்வதவர்த்தினி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து 9-ம் திருநாளான இன்று கன்னி லக்கனத்தில் தேரோட்டம் நடைபெற்றது. கருப்பசாமி ஆட்டம் அலங்கரிகப்பட்ட தேரில் ஶ்ரீபர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலின் கிழக்கு வாயில் முன்பிருந்து எழுந்தருளினார். தீபாராதனைகளுடன் புறப்பட்ட திருத்தேரினை நகரின் முக்கிய பிரமுகர்கள், திருக்கோயில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருக்கோயிலின் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்த திருத்தேருக்கு முன்பாக ராமநாதபுரம் சிலம்பொலி கலை குழுவின் கருப்பசாமி ஆட்டம், கட்டை கால் ஆட்டம், ஒயிலாட்டம், சிறார்களின் சிலம்பாட்டம் ஆகியன நடைபெற்றன. தேரோட்டத்தில் ஓயிலாட்டம் இவற்றுடன் மணிகண்ட பிரபு, நிஷா குடும்பத்தினர் உபயத்துடன் மதுரை எம்பிராட்டி மங்கையர்கரசி அம்மையார் குழுவினரின் திருக்கைலாய வாத்ய நிகழ்சியும் நடைபெற்றது. நான்கு ரதவீதிகளில் பவனி வந்த திருதேர் நிலையை அடைந்தவுடன் அங்கு அம்பாளுக்குச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/festivals/rameswaram-ramanathaswamy-temple-aadi-festival-chariot-procession-with-karuppasami-dance




