திருநெல்வேலி, திருநெல்வேலியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்ட வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளப் பதிவுகள் கண்காணிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் இந்த நிலையில், நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 20) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதனை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து கண்டறிந்தனர். வாலிபர் கைது அதைத் தொடர்ந்து இசக்கிராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை எச்சரிக்கை இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றைப் பகிர்வு செய்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக தீங்கிழைக்கும் கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ, பயங்கர ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-youth-arrested-for-posting-photo-with-sickle-on-instagram




