புதுடெல்லி, அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ஐகோர்ட்டில் வழக்கு கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் த.வெ.க. சார்பில் செங்கோட்டையன் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பிரபு என்பவர், செங்கோட்டையன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வெற்றி செல்லாது அந்த மனுவில், "செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டது. அதனால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது தவறு. எனவே, செங்கோட்டையன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி செங்கோட்டையன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தேர்தல் வழக்கை கடந்த 15-ந்தேதி நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரபு சார்பில் வக்கீல் சித்தார்த்தா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், 'செங்கோட்டையனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவே தேர்தலின் அடிப்படை. அதாவது அவர் தேர்தலில் போட்டியிட்டு இருக்க முடியாது. ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/amaiccar-cenkottaiyanukku-etiranaa-tertal-vaccu-suprim-korttil-a-ti-mu-ka-melmuuraiitu




