மும்பையில் சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஸ்னாப்சாட் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைக் கும்பலைக் கைதுசெய்ய போலீஸாரே ஒரு வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து போதைப்பொருள் விற்பனை செய்யும் நபரிடம் அனுப்பி வைத்தனர். அந்த வாடிக்கையாளர் போதைப்பொருள் விற்பனை செய்யும் காசிப் என்பவரை தொடர்பு கொண்டு எம்.டி எனப்படும் போதைப்பொருள் தேவை என்று தெரிவித்தார். காசிப் மும்பை தகிசர் செக் நாகா பகுதியில் உள்ள தாக்கூர் மால் அருகே 28 கிராம் எம்.டி. எனப்படும் போதைப்பொருளுடன் வருவதாகத் தெரிவித்தார். அந்த இடத்திற்கு போலீஸார் அனுப்பிய வாடிக்கையாளர் சென்றார். அந்த வாடிக்கையாளர் காசிப்பைப் பார்த்ததும் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு காசிப்பை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5.60 லட்சம் ஆகும். காசிப்பிடம் விசாரணை நடத்தியதில் அவர், நடிகர் ரோஹுல்லா மெஹ்தியை அடையாளம் காட்டினார். உடனே போலீஸார் மெஹ்தியைக் கைதுசெய்தனர். மெஹ்தி படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மலாடு ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்த போது அவரை மடக்கி கைதுசெய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர், புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மெஹ்தி, மும்பையில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார். தற்போது மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் அவர், நடிகர் சாஹித் கபூரின் தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெஹ்திக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் இப்போதைப்பொருள் விவகாரத்தில் வேறு எந்த பாலிவுட் பிரமுகருக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/bollywood-actor-arrested-for-selling-drugs-via-snapchat-and-whatsapp




