சென்னை, ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிட்டு மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் நிதியாண்டுக்கு 8.25 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு சந் தாதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைப்பது வழக்கம். அந்த வகையில், 2025-26-ம் நிதியாண்டில் 34 கோடி சந்தாரர்களுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வட்டியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, தற்போது ஒவ்வொரு சந்தாதாரர்களின் வங்கி கணக்கிலும் வட்டி வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சந்தாதாரர்களின் பி.எப். கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒருவேளை இதுவரை வட்டி வரவு வைக்கப்படவில்லையெனில் பதற்றம் அடைய தேவையில்லை என்றும், அடுத்த சில நாட்களில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-interest-central-government-paid-rs-144-lakh-crore




