திருநெல்வேலி, நிர்வாண படம் எடுத்து மிரட்டி பிளஸ்-2 மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ரவுடிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது கூட்டாளி உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கி நெல்லை சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பிளஸ்-2 மாணவி நெல்லையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெள்ளை அடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 26) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஒருவருக்கும், முனீஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நிர்வாணமாக படம் எடுத்தனர் இது நாளடைவில் காதலாக மாறியது. அவர் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். கடந்த 10.10.2022 அன்று மாணவியை முனீஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை வீரராகவபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அந்த மாணவி நிர்வாணமாக இருந்ததை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். கூட்டு பலாத்காரம் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக முனீஸ்வரனையும், அந்த மாணவியையும் மிரட்டினர். தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்தி 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். 3 பேர் அதிரடி கைது விசாரணையில், மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது நெல்லை கொக்கிரகுளம் கீழவீரராகவபுரத்தை சேர்ந்த சின்னக்குட்டி(28), முருகேசன்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மற்றும் மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற முனீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி, முருகேசன் ஆகியோரை மேலப்பாளையம் போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். தூக்கு தண்டனை இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சின்னக்குட்டி, முருகேசன், முனீஸ்வரன் ஆகியோர் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் 8-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். நேற்று காலையில் 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதேபோல் அவரது கூட்டாளியான முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி நீதிபதி சுரேஷ்குமார் இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது போக்சோ கோர்ட்டில் மட்டும் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கும், மகளை கர்ப்பமாக்கிய தந்தை என 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்துள்ளார். இதுதவிர 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கும், மற்றொரு கொலை வழக்கில் ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அவர் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rowdy-who-gang-raped-a-plus-2-student-gets-death-sentence-2-get-jail




