முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.9) சேலத்தில் நடைபெற்றது. 'சிக்மா' இதில் கலந்துகொண்டு பேச ஆரம்பிக்கும்போது ஜேசன் சஞ்சய், 'என் குடும்பத்திற்கு நன்றி' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அரங்கம் முழுவதும் TVK, TVK என்று மாணவர்கள் ஆரவாரம் செய்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், "'சிக்மா' நான் இயக்கிய முதல் படம். "எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்."- முதல்வர் விஜய் விளக்கம் நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் 'சிக்மா' என்ற ஒரு மொமன்ட் இருந்திருக்கும். அதாவது ஒரு பெரிய கஷ்டத்தில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில் நாம் ஒரு முடிவை எடுத்திருப்போம். அதனால் நம் மொத்த வாழ்க்கையும் மாறியிருக்கும். அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு கதைதான் சிக்மா. ஜேசன் சஞ்சய் அனைவருக்கும் இந்தப் படத்தை கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். தியேட்டருக்குச் சென்று ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். படம் பிடித்திருந்தால் நிச்சயம் எல்லோரிடமும் சொல்லுங்கள். எல்லோருக்கும் நன்றி" என்று பேசியிருக்கிறார். Sundeep Kishan: ``விஜய் மகன்னு சொல்லாதீங்க,அவர் பேரு ஜேசன் சஞ்சய்"- சந்தீப் கிஷன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/jason-sanjay-speech-at-sigma-movie-pre-release-event




