பாகூர், புதுச்சேரி மணவெளி தொகுதி எம்.எல்.ஏ.வாக தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ராமு உள்ளார். இவர் நேற்று காலை 10 மணியளவில் தவளக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து, மணவெளி தொகுதியை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மருத்துவமனை இந்த நிலையில் ராமு எம்.எல்.ஏ.வுக்கு திடீரென முதுகு மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே ராமு எம்.எல்.ஏ.வை அவரது உதவியாளர்கள் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ராமு எம்.எல்.ஏ. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு. ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/tvk-mla-suffers-sudden-chest-pain-admitted-to-hospital




