சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகத்தில் தற்போது வெப்பம் சற்று அதிகரித்திருப்பதால் ஏற்பட்ட திட்டமிடப்படாத மின்வெட்டு மற்றும் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் குறிப்பாக, ராயபுரம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், அடையாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீண்ட நேர இரவு நேர மின்வெட்டு மற்றும் அதனால் தூக்கம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்களின் கொந்தளிப்பு மற்றும் போராட்டங்களாக மாறி வருகின்றன. மின்வெட்டுக்கு காரணம் திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அறிவிக்கப்படாத 2 மணி நேர மின்வெட்டுகளால் தொழில், விவசாயத்துறைகளும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, பிளாஸ்டிக், ஜவுளி, என்ஜினீயரிங் தொழிற்சாலைகளில் உற்பத்தி இழப்பு மற்றும் மூலப்பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், வாழைத்தோட்டங்கள் மற்றும் சம்பா நெல் நாற்றங்கால்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இடையூறு ஏற்படுவதோடு, விவசாயிகளின் பம்புசெட் மோட்டார்களும் பழுதடைவதாகவும் புகார் கூறி வருகின்றன. மின்சார உற்பத்தி பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான சுமையுள்ள வினியோக வலையமைப்பு ஆகியவை சென்னையில் அடிக்கடி மின்சாரவெட்டு ஏற்படக் காரணமாகின்றன என்றும் கூறப்படுகிறது. மின்தேவை குறைவு மின்சாரத்தின் தேவையை பொறுத்தவரையில் கடந்த 19-ந்தேதி 19 ஆயிரத்து 283 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு தேவயைான மின்சாரம் அனல், நீர், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட வற்றின் மூலம் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று மின்சாரத்தின் தேவை 15 ஆயிரத்து 260 மெகாவாட் என்ற அளவில் குறைந்தது. இருந்தாலும் மின் வெட்டுக்கு பல்வேறு காரணங்கள் பரவலாக இருந்துள்ளது. அரசுக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலையங்கள் தவிர வெளியிடங்களில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார உற்பத்திக் கழக அதிகாரிகள் கூறியதாவது:- அரசுக்கு சொந்தமான அனல் மின்சார நிலையங்கள் அவற்றில் நிறுவப்பட்ட திறனை விட மிகக் குறைவாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தன. 800 மெகாவாட் திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையமான வட சென்னை அனல் மின்நிலையத்தின் 3-ம் கட்டம் 46 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. அதேசமயம் 2-ம் கட்டத்தின் 600 மெகாவாட் அலகுகள் 2-ம் முறையே 42 சதவீதம் மற்றும் 46 சதவீதம் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. நிலைமை சீரடையும் ஒரு சில மின்சார உற்பத்தி நிலையங்கள் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டியிருந்ததால், அவற்றால் தங்களின் முழுத் திறனை எட்ட முடியவில்லை. இருப்பினும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அவை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. அடுத்த கோடையில் அவற்றின் பயன்பாட்டை உறுதி செய்ய இந்தப் பராமரிப்பு அவசியமாகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக மின்சார நுகர்வு முந்தைய ஆண்டின் அளவை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின்சார உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவதும் இந்தச் சூழலுக்கு காரணமானது. காலநிலை மாறிவிட்டால் அடுத்த மாத தொடக்கத்தில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/power-outage-issue-in-tamil-nadu-to-be-fully-resolved-next-month-officials




