மெல்போர்ன், இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அப்போது மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது; முதலீட்டாளர்களுக்கு அழைப்பு இந்தியாவின் வளர்ச்சி ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது. நாம் ஒன்றிணைந்து, நம்பிக்கையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கூட்டாண்மைகளை உருவாக்க முடியும். இருதரப்பு வர்த்தக உறவுகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்திய மாநிலங்களும் ஆஸ்திரேலிய மாகாணங்களும் ஆற்றல்மிக்க பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்குவது முக்கியம்.” எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனம் இந்தியாவில் ரூ.3,300 கோடி முதலீடு செய்ய முன்வந்ததை பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/prime-minister-modi-arrives-in-australia-invites-companies-there-to-invest-in-india




