புதுடெல்லி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜம்மு-காஷ்மீருக்கு முடிந்தவரை விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 2024-ல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அபார வெற்றி பெற்றது. அவரது மகன் உமர் அப்துல்லா முதல்-மந்திரி பதவியேற்றார். அவரும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ஆகியவை ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் அமைதி, முன்னேற்றம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது. டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் கொண்டாடும் வேளையில், இந்தியாவின் ஒற்றுமைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நாம் போற்றுகிறோம். அவரது அந்த தொலைநோக்குப் பார்வை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நனவானது. ஒரே நோக்கத்துடனும் உறுதியான மனவுறுதியுடனும், வளமான ஜம்மு-காஷ்மீர், செழிப்பான லடாக் மற்றும் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) ஆகியவற்றை உருவாக்குவதில் நமது நாடு தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/seven-years-since-the-abrogation-of-article-370-rajnath-singh-hails-the-beginning-of-a-new-era




