ஐதராபாத்தில் நடந்த ‘டாக்ஸிக்’ பட நிகழ்ச்சியில் ஸ்பீக்கர் விழுந்து விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த “டாக்ஸிக்” பட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. இப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் ‘டாக்ஸிக்’ படத்தின் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் யாஷ், கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.‘கே.ஜி.எப்’ படப் புகழ் நடிகர் யாஷைக் காண்பதற்காகப் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களும், ரசிகர்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் முயற்சி செய்தபோதிலும், ரசிகர்கள் மேடையின் அருகே வரத் தொடங்கினர். ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்து விபத்து நிகழ்ச்சியின் போது நடிகர் யாஷ் மேடையில் ரசிகர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, மேடைக்கு அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த சில மாணவர்கள், ஒலிபெருக்கி மற்றும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட இரும்பு ஸ்டாண்ட் மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. பாரம் தாங்காமல் அந்த கட்டமைப்பு திடீரெனச் சரிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது. இந்த விபத்தில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர், மேலும் ஒரு கல்லூரி மாணவி அதிர்ச்சியில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட காயமடைந்த மாணவர்கள், அம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பேச்சை பாதியில் நிறுத்திய நடிகர் யாஷ் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே இந்தச் அசம்பாவிதம் நடந்ததைக் கண்ட நடிகர் யாஷ், உடனடியாகத் தனது பேச்சை நிறுத்திவிட்டு, “அங்கே அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? தயவுசெய்து கவனமாக இருங்கள், மாணவர்களுக்கு எதுவும் ஆகவில்லையே?” என அமைப்பாளர்களிடம் பதற்றத்துடன் விசாரித்தார். பின்னர், மற்றொரு ஸ்பீக்கர் கட்டுமானத்தின் மேல் ஏறி நின்ற ரசிகர்களை கீழிறங்குமாறு அவர் வலியுறுத்தினார். நிலைமை கட்டுக்குள் வந்ததை உறுதி செய்த பிறகே அவர் தனது உரையைத் தொடர்ந்தார். திரைப்பட விழாக்களில் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்நிகழ்வை நடத்திய கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) மாலை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. காரணம் என்ன? நேற்று (ஆகஸ்ட் 22] ஐதராபாத்தில் நடைபெற்ற ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் நிகழ்வின்போது, எதிர்பாராதவிதமாக ஸ்பீக்கர் ஸ்டாண்ட் சரிந்து விழுந்ததில் சிலர் படுகாயமடைந்ததையடுத்து, இன்று சென்னையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Chennai, we’re just as excited as you are! We just need a bit more time to prep for the big day. Pre-release event(Tamil), now on 24th August (Tomorrow), 5 PM. Same Ticket will be valid for Tomorrow. In Cinemas Worldwide from 26.08.2026. — TOXIC (@Toxic_themovie) August 23, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/toxic-film-pre-release-event-to-be-held-in-chennai-today-has-been-postponed




