சிவகங்கை, வி.மிக்கேல் பட்டினத்தில் அதிதூதர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் சிவகங்கை அருகேயுள்ள வி.மிக்கேல்பட்டினத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் 110-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில், பாம்பன் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ பங்கேற்று கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் 20ஆம் தேதி மதுரை கருமாத்தூர் தூய ஆவியார் சபையைச் சேர்ந்த அருள்பணி ஜோஸ்பிரான்சிஸ் தலைமையில் ஜெபமாலை, சிறப்பு ஜெபம், குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, பாவ மன்னிப்பு வழிபாடு, சிறப்புத் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேர் பவனி தெலுங்கானா மாநில தூய ஆவியார் சபை நிறுவனர் அருள்பணி கிறிஸ்துராஜ் தலைமையில் திருவிழாத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இன்று காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது. மாலையில் நற்கருணை பெருவிழா, பவனியும், இரவு சிநேகிதரின் நண்பர்கள் இளைஞர் இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை 28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நன்றித் திருப்பலியும், திருவிழாவின் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/sivagangai-v-michaelpattinam-st-michael-the-archangel-ther-bhavani




