சானோ, ஜப்பானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றை டி20 போட்டிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜப்பான் வீரர்களுடன் தங்களது ஜெர்சிகளை பரிமாறிக்கொண்டனர். திரில் வெற்றி ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியா, ஜப்பான் இடையிலான ஒற்றை டி20 போட்டி நடந்தது. மழை காரணமாக இந்த போட்டி தலா 5 ஓவர்களாக குறைக்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பந்துவீச்சுக்கு சாதகமாகவும் மெதுவாகவும் இருந்த ஆடுகளத்தில் இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்தது. பின்னர் 33 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜப்பான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்து 30 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஜப்பானுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக வரலாறு படைத்தது. இன்ப அதிர்ச்சி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றை டி20 போட்டிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜப்பான் வீரர்களுடன் தங்களது ஜெர்சிகளை பரிமாறிக்கொண்டனர். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஜப்பான் வீரர் டெக்லான் சுசுகி-மெக்கோம்புடன் தனது ஜெர்சியை பரிமாறிக்கொண்டார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், தனது இரண்டு ஜெர்சிகளை ஜப்பான் வீரர்களுக்கு வழங்கினார். மேலும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, ஜப்பான் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு தனது ஜெர்சியை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/indian-stars-give-a-pleasant-surprise-to-japanese-cricketers-photos-go-viral-online




