சென்னை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளித்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வடபட்டி கிராமத்தில் இன்று (13.08.2026) தனியாருக்குச் சொந்தமான வெடி பொருட்கள் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 41) த/பெ.சர்க்கரையப்பன் என்பவர் பலத்த காயமுற்று சிகிச்சைக்காக சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றியும், அவ்விபத்தில் பலத்த காயமுற்ற திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் (வயது 66) த/பெ.காதர் மைதீன் என்பவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-orders-financial-assistance-of-rs-4-lakh-each-to-the-families-of-those-who-died-in-the-sivakasi-firecracker-factory-accident




