கார்த்திகேயன் இயக்கத்தில் ரியோ நடிக்கும் “மேடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்’ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ என்ற படம் வெளியானது. கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்திருந்தார். கணவன் மனைவி உறவை மையமாக வைத்து வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘ராம் இன் லீலா’ படம் சமீபத்தில் வெளியானது. ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7-வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் பிகே இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். அறிவிப்பு போஸ்டரில் இப்படத்திற்கு, ‘மேடி’ எனப் பெயரிட்டுள்ளதையும் அறிவித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு, படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். கார்த்திகேயன் ‘மீசைய முறுக்கு, நட்பே துணை, மாஸ்டர், வாரிசு, லியோ’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் சிங்கம் புலி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், ரியோ ராஜ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rio-rajs-maddy-film-shooting-has-been-wrapped-up




