நகோயா, ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வழக்கமாக வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விசேஷ விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும். ஆனால் ஜப்பானில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிக்காக பிரத்யேகமாக விளையாட்டு கிராமம் கட்டப்படவில்லை. இந்த கிராமம் அமைப்பதற்கு அதிக செலவாகும் என்ப தால் ஜப்பான் அரசு, அதற்கு பதிலாக சொகுசு கப்பல், கண்டெய்னர் பாணியில் அமைக்கப் பட்டுள்ள தற்காலிக குடில் மற்றும் அருகில் உள்ள ஓட்டல்களில் வீரர், வீராங்கனைகளை தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வீரர்கள், பயிற்சி யாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், அணியின் நிர்வாகிகள் என 17,000 பேரும், டெக்னிக்கல் அதிகாரிகள் 5,000 பேரும் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்க முடியாமல் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பு குழு திணறி வருகிறது. தங்குமி டம் ஒதுக்குவதில் காலதாமதம் மட்டுமின்றி, ஒதுக்கிய இடங்களில் நெருக்கடி, உயரமான வீரர்களுக்கு பொருத்தமான படுக்கை வசதியின்மை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் டைரக்டர் ஜெனரல் ஹூசைன் அல் முசல்லம் நேற்று கூறுகையில், 'ஆசிய விளையாட்டு போட்டியை, மற்ற விளையாட்டு சம்மே ளனங்களால் நடத்தப்படும் கண்டங்களுக்கான போட்டிகளுடன் ஒப்பிட முடியாது. முதலாவது, எங்களுக்கு ஒரு விளையாட்டு வீரர்கள் கிராமம் வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரத்தில் நாங்கள் நெகிழ்வு தன்மையுடனும் இருக்க வேண்டியது அவசியம். விளை யாட்டு போட்டிக்கு ஆகும் செலவு குறித்தும் சிந்திக்க வேண்டும்.விளையாட்டு வீரர்கள் கிராமம் வேண்டும் என்று வலியுறுத்துவது மிகவும் எளிது. அதைக் கட்டுவதற்கு நீங்கள் இவ்வளவு பணம் செலவழித்துவிட்டீர்கள். விளையாட்டு போட்டி நிறைவடைந்த பிறகு அதை எந்த வகையில் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அடுத்த இரண்டு ஆசிய விளை யாட்டு போட்டிக்காக (2030-ம் ஆண்டு தோகா, 2034-ம் ஆண்டு ரியாத்) நாங்கள் ஏற்கனவே விளையாட்டு வீரர்களுக்கான கிராமத்தை அமைக்கும் பணியை தொடங்கி விட்டோம். என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/athletes-village-to-be-set-up-for-players-olympic-council-of-asia-confirms




