சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அவரது குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால், சந்தனம், புஷ்ப காவடிகள் எடுத்து வந்தும், பசுக்களுடனும் வந்தும் வழிபட்டனர். இந்த விழாவின்போது குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் கேட்டு மண்சோறு சாப்பிட்டு வழிபடுவார்கள். இதையொட்டி நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெரிய பந்தலில் நடந்த மகாயாகத்தில் அவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் பிரசாதத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அருகில் உள்ள குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டனர். வேண்டுதல் நிறைவேறிய தம்பதியினர் குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை துலாபாரம் செலுத்தினர். இதனை யொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடகம், இன்னிசை கச்சேரி, கிராம தேவதை பொன்னியம்மனுக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/women-who-knelt-with-their-hands-tied-behind-their-backs-and-ate-mann-soru




