சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “த.வெ.க. ஆதரவுக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று ம.தி.மு.க. நிச்சயம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதால் மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இதன் மூலமாக ஆளுங்கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு பெருகி வருகிறது. சட்டமன்ற நிகழ்வுகள் தொலைக்காட்சியில் முழுமையாக வருவது நிர்வாகத்திற்கும் நல்லது, ஜனநாயகத்திற்கும் நல்லது. எதிர்க்கட்சிகளிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தாலும், அவற்றை சிறப்பாக இடைமறித்து பதில் சொல்லக்கூடிய ஆற்றலை அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். த.வெ.க. அரசு ஊழலை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று சொன்னது மட்டுமல்லாமல், இன்று அரசு அலுவலகங்களில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் வகையில், ஊழலை ஒழிப்பதில் த.வெ.க. வெற்றி பெற்று வருகிறது. ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-succeeding-in-eradicating-corruption-vaiko




