லண்டன், கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றது. 3வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து 355 ரன்கள் அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டாம் பென்டன் அதிகபட்சமாக 126 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அஷிதா பெர்னாண்டோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து வெற்றி இதனை தொடர்ந்து 356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 29.1 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கையை 223 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் லியம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/final-odi-england-crush-sri-lanka-for-huge-win




