சென்னை, பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். தவெக-பாமக கூட்டணி தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே பாமகவுடன் நெருக்கம் காட்டிவருகிறது. இதனிடையே கடந்த ஒருவாரமாக தவெக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாகவும், சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தவெக கூட்டணியில் விசிக இருந்து வரும் சூழலில், பாமக இணைவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளன. அதேபோல் பாமக கூட்டணியில் இணைந்தால் விசிக ஒப்புக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி நேர்காணல் அளித்துள்ளார். அதில் எஸ்.எஸ்.பாலாஜி பேசுகையில், கூட்டணியில் இருப்பதால். அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது நிச்சயம் தவறு தான். எங்களின் கண்டனத்தை தெரிவித்த போதும், அவர்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள். குதிரைபேரம் என்பதில் விசிக மாறவில்லை. ஆனால் கூட்டணியில் இருப்பதால், ஆதரிக்க வேண்டியசூழலில் இருக்கிறோம். தவெக செய்த பிழை தான். அதற்கான விலையை தவெக கொடுத்துதான் ஆக வேண்டும். நிச்சயமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர்கள் தான் வெல்ல போகிறார்கள். வென்றாலும், எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு என்பது கட்சிகள் உருவாக்கியது அல்ல. அந்த இரு தொகுதிகளில் அதிமுக பலமாக இருக்கிறது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு நல்ல போட்டியை தவெக கொடுத்துள்ளது. தவெகவில் யார் தேர்தல் வேலை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தவெக எங்களையும் சேர்த்து அறிவித்தது தவறு தான். கூட்டணிக்கு விசிக எதிர்ப்பு தொடர்ந்து தவெக, பாமக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, தவெக தரப்பில் எந்தவித நகர்வும் இல்லை. பாமகவை எப்படி கொண்டு வரப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களை எப்படி தவெக பார்க்கிறது என்பது நன்றாக தெரியும். கூட்டணி கட்சி கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. பாமக வேண்டும் என்று முடிவு செய்தால், விசிக வேண்டாம் என்று முடிவு செய்ததாக அர்த்தம். சட்டசபைத் தேர்தலின்போதே ராமதாஸ் அணி, திமுக கூட்டணிக்கு வரப்போவதாக பேச்சுகள் வந்தன. பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தவெகவும் இருக்கும் என்று நம்புகிறோம். விசிக வேண்டும் என்ற எண்ணத்தில் தவெக இருக்கிறது. எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vck-will-not-be-part-of-the-tvk-alliance-if-pmk-joins-party-treasurers-interview




