சென்னை, 8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்கியது. அங்கு நடந்த முதல் கட்ட 20 லீக் ஆட்டங்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (6 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (6 புள்ளி) முறையே முதல் 4 இடங்களை வகிக்கின்றன. திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) 5-வது இடத்திலும், கோவை கிங்ஸ் (4 புள்ளி) 6-வது இடத் திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் (4 புள்ளி) 7-வது இடத்திலும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் (0) கடைசி இடத்திலும் உள்ளன. இறுதிப்போட்டி உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. 8 லீக், பிளே-ஆப், இறுதிசுற்று என இன்னும் 12 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெ றும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோது கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-in-chennai-chepauk-and-kovai-kings-to-clash-today




