சமர்கண்ட், செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி தோல்வி 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, 6-வது சுற்றில் போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1½-2½ என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்திய வீரர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரின், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுப்போவிடம் 54-வது காய் நகர்த்தலில் சரண் அடைந்தார். முதல் 5 சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த இந்திய அணிக்கு, இந்த தோல்வி முதல் பின்னடைவாக அமைந்தது. பெண்கள் அணிக்கு வெற்றி அதேவேளையில், பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. 6-வது சுற்றில் அமெரிக்க அணியை எதிர்கொண்ட இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இந்தியா இதன் மூலம் 6 சுற்றுகளின் முடிவில், ஓபன் பிரிவில் இந்திய அணி 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/46th-chess-olympiad-contrasting-fortunes-for-india-in-open-womens-section-during-round-6




