மும்பை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று மராட்டிய மாநிலம் புனேவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 2026-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் தேசிய விருதை வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார், மத்திய கூட்டுறவுத் துறை இணைமந்திரி முரளிதர் மொகல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மோடி, மன்மோகன் சிங் இதற்கு முன்பு இந்த உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்ட பல்துறை சாதனையாளர்கள் ஏற்கனவே இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமது உரையில் தெரிவித்ததாவது:- சுயராஜ்யம் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய திசையையும், உத்வேகத்தையும் தந்த மாவீரர் லோகமான்ய பாலகங்காதர திலகரின் 106-வது நினைவு தினம் நாடு முழுவதும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய திலகரின் பாதையில், இன்று ஒட்டுமொத்த தேசமும் கலாச்சார தேசியவாதத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. உத்வேகம் அஜித் தோவலுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது, தேச சேவைக்காக உழைக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக அமையும் என்று அமித் ஷா கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/ajit-doval-receives-2026-lokmanya-tilak-national-award




