Doctor Vikatan: எனக்கு வாய்ப்புண் பாதிப்பு உள்ளது. நாக்கு மற்றும் செவிகளின் உள் பகுதியிலும் புண் உள்ளது. லேசான காரமான உணவுகள் சாப்பிட்டாலும் எரிச்சல் கடுமையாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புண் தெரிவதில்லை.குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரிடம் காட்டி அலோபதி மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. தயவுசெய்து இதற்குத் தீர்வு சொல்லவும். -மகேந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் ஷியாம் குமார். காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் ஷியாம் குமார். வாய்ப்புண், நாக்கு மற்றும் வாயில் எாிச்சல், சில சமயங்களில் காதிலும் அசௌகர்யம் போன்ற புகார்களுடன் வரும் நபர்களை இப்போதெல்லாம் அதிகம் பார்க்கிறோம். லேசான காரமுள்ள உணவை உட்கொள்ளும்போது கூட இந்த எரிச்சலை உணர்கிறார்கள். இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் இருக்கக்கூடும். போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவை உட்கொள்வது அல்லது வைட்டமின் குறைபாடு பிரதான காரணமாக அமைகிறது. சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் உணவு ஒவ்வாமை (Food Allergies) கூட ஒரு காரணம்தான். வாய் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தும் சிலர், அதிகளவில் மவுத் வாஷ் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பல தயாரிப்புகள், ஆல்கஹால் (Alcohol) சார்ந்தவை என்பதால், அவை வாய் மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். மிக அரிதாக, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே உடலை பாதிக்கும் நிலைகளில் அதாவது ஆட்டோஇம்யூன் கோளாறுகள் (Autoimmune conditions) கூட ஆரம்பகட்ட அறிகுறியாக வாய் மற்றும் தொண்டையில் எரிச்சலையும் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தலாம். வாய் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தும் சிலர், அதிகளவில் மவுத் வாஷ் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பல தயாரிப்புகள், ஆல்கஹால் (Alcohol) சார்ந்தவை என்பதால், அவை வாய் மற்றும் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் இந்தப் பிரச்னை மறுபடி மறுபடி வராமல் தடுக்கலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய சத்தான, சீரான உணவை (Balanced diet) போதுமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக காரம், அதிக எண்ணெய், அதிக புளிப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செயற்கை உணவு வண்ணங்கள் (Food colors) ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உணவு சாப்பிட்ட பிறகு படுப்பதற்கு இடையே குறைந்தபட்சம் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். படுப்பதற்கு அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்களுக்கு முன்பே பால், தண்ணீர் போன்றவற்றைக் குடித்து முடித்துவிட வேண்டும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உணவு உங்கள் அறிகுறிகளை அதிகப்படுத்துகிறது என்று உணர்ந்தால், அந்த உணவைத் தவிர்க்கவும். சிகரெட், பீடி, புகையிலை, குட்கா, பாக்கு போன்ற எந்த வடிவத்திலாவது புகையிலைப் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். புகையிலையினால் திசுக்கள் பாதிக்கப்படும் ஆரம்பகட்டத்தில் வாயில் வெள்ளைத் திட்டுகள் (Leukoplakia) தோன்றி, இதுபோன்ற அசௌகர்யங்களை ஏற்படுத்தலாம். சிகரெட், பீடி, புகையிலை, குட்கா, பாக்கு போன்ற எந்த வடிவத்திலாவது புகையிலைப் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். சரும ஒவ்வாமை (Skin allergies) உள்ளவர்களுக்கும் வாயில் இதே போன்ற அறிகுறிகள் வரலாம். ஏனெனில், வாயின் உட்புற சவ்வு (Lining) சருமத்தின் அமைப்பைப் போன்றே முடி இல்லாமல், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால் அது கறுப்பாக மாறும், ஆனால், வாயில் அலர்ஜி ஏற்பட்டால் அது வெள்ளையாகத் தோன்றும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். டாக்டர் ஷியாம் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/is-there-a-solution-for-mouth-ulcers-that-do-not-heal-with-treatment-and-cause-a-burning-sensation-when-eating-spicy-food




