திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலம் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 11.06 மணி அளவில் தொடங்கியது. இதனால் இரவு 7 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் திருவண்ணாமலையில் அதிகரிக்க தொடங்கியது. கிரிவலம் செல்வதற்காக பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், ரெயில் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம். கூட்டமாக வந்தனர். விடிய, விடிய. இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் இன்று (சனிக்கிழமை) இரவு 10.44 மணி வரை உள்ளதால் பக்தர்கள் இன்று காலை வரையில் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையிலான போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-perform-girivalam-in-tiruvannamalai-on-the-occasion-of-purattasi-months-full-moon




