திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர் துருவங்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸை துவக்கி வைத்ததும், அவரைக் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதும் தமிழகத்தில் பேசுபொருளானது. அதேசமயம் அந்தச் சம்பவம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எழுப்பியது. இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை பகுதியில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து, `தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கின்றனர். தமிழக மக்கள் கழகம் கொடி அறிமுகம் மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட இந்தக் கட்சியின் கொடியில் நடுவில் இரண்டு சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில தலைவராக ஆபித், மாநிலச் செயலாளராக ராம்குமார், மாநிலப் பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் ஆபித் அவர்களிடம் பேசியபோது, ``தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இருக்கும் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜீத் அவர்களின் 5 லட்சம் ரசிகர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கட்சியை தொடங்கியிருக்கிறோம். எங்களுக்குப் பிறகு அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜீத் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டாவது, மூன்றாவது கட்சிகளை ஆரம்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாம் அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளையாக செயல்பட வேண்டும். மற்ற கட்சியினரை அவமானப்படுத்தவோ, அசிங்கப்படுத்தவோ இந்தக் கட்சியை நாங்கள் ஆரம்பிக்கவில்லை. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கிருக்கும் நம் நிர்வாகிகள், அவர்களுக்கு அனைத்துச் சேவைகளையும் செய்வார்கள். கடந்த முப்பது ஆண்டுகளாக ரசிகர்களாக நாங்கள் செய்த சேவையை, இனியும் தொடர வேண்டும் என்றுதான் இந்தப் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். தமிழக மக்கள் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறோம். அதற்கான கொடியையும் அறிமுகம் செய்யும் கூட்டத்தை இன்று நடத்தினோம். மனித நேயத்துடன் கூடிய மதச்சார்பற்ற மக்கள் பணி, சாதி சமயமற்ற சமூக நீதிகோட்பாட்டை வலியுறுத்துதல், இயற்கை வள பாதுகாப்பு, பெண்ணுரிமை மற்றும் சம வாய்ப்பு, தமிழர் நலம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாகக் கொண்டு இந்தக் கட்சியை தொடங்கியிருக்கிறோம். அதேபோல மாதம் ஒருமுறை ஆதரவற்றக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அன்னதானம் வழங்குவது என்று முடிவெடுத்திருக்கிறோம். சாதிமத வேறுபாடுகளின்றி, அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதற்காக போராடுவது. அதேபோல அஜீத் சார் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை. இந்தக் கழகத்தையும் ஆரம்பிக்கச் சொல்லவில்லை. தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களான நாங்கள்தான் இந்தக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறோம். அஜித் சார் அரசியலுக்கு வரவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதற்காகத்தான் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம். அவர் வந்தால் இந்தக் கட்சி அவருக்கு சமர்ப்பணம். வரவில்லை என்றால் அவருடைய ரசிகர்களாகவே இந்தக் கட்சியில் நாங்கள் பயணிப்போம்" என்றனர். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியபோது, `இது தல கட்சிடா…' என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். 20 அடி உயர கட்-அவுட்டில் ஏறி பாலாபிஷேகம்! - அஜித் ரசிகர்களுக்கு நடந்த விபரீதம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/in-kallakurichi-ajith-fans-launch-a-new-party-named-tamizhaga-makkal-kazhagam



