புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆனால் அந்த போட்டியின்போது தனது 3-வது ஓவரை வீசியபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகினார். முதலில் வருண் சக்கரவர்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. தற்போது அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் விப்ராஜ் நிகாம் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-varun-chakravarthy-withdraws




