சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் மற்றும் ஒரு மின் ஊழியர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். மின் இணைப்பு மாற்ற ரூ.500 லஞ்சம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில், வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றுவதற்காக நுகர்வோர் ஒருவரிடம் இளநிலை பொறியாளர் சையது (வயது 48) என்பவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இளநிலை பொறியாளர், மின் ஊழியர் கைது லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில், நேற்று ரசாயனம் தடவிய நோட்டுகளை சையதுவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த மின் ஊழியர் பஞ்சநாதன்(36) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sivaganga-junior-engineer-arrested-for-accepting-rs-500-bribe-to-change-electricity-connection




