கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காள மாநிலம் வடக்கு பர்கானஸ் மாவட்டம் ஹப்ரா பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பிஸ்வநாத் சென் என்ற போலீஸ் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சப் - இன்ஸ்பெக்டர் தற்கொலை இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் சென் இன்று காலை காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் இருந்து வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார், பிஸ்வநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பிஸ்வநாத் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/police-sub-inspector-found-hanging-in-barracks-in-west-bengal



