சென்னை, பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.55 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069) மறுநாள் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (6-8-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-special-train-between-tirunelveli-and-tambaram




