இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் பிரசாரக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் விஜய். இரண்டு தொகுதிகளுக்கும் ஒவ்வொரு நாள் பிரசாரத்துக்கு சென்று வந்த முதல்வர் விஜய், இரண்டாவது முறையாக மீண்டும் செல்லவிருக்கிறார். நாளை மதுராந்தகத்தில் ரோடு ஷோவில் ஈடுபடவிருக்கிறார். இதன் ஒருபகுதியாக முதல்வர் விஜய் மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. CM Vijay முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரக் கூட்டத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், நாளை மீண்டும் மதுராந்தகம் தொகுதிக்குள் ரோடு ஶோ செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், 'மதுராந்தகம் தொகுதியில் விசில் சின்னத்துக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அமைச்சர்களுக்கும் தலா 25-30 பூத்கள் என பிரித்துக் கொடுக்கப்பட்டு பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் தலைவரும் தொகுதிக்குள் ரோடு ஷோ வருவதால் பெரிய ப்ளஸ்ஸாக இருக்கும். நாளை மதியம் இரண்டு மணிக்கு மேல் சென்னையிலிருந்து கிளம்பி மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் தொகுதியின் முக்கியமான பாய்ண்ட்டுகளை டச் செய்து 40-50 கி.மீ தூரத்துக்கு தலைவர் சுற்றி வர இருக்கிறார். CM Vijay இடையில் முக்கியமான 5 பகுதிகளில் நின்று தொண்டர்களுக்கு கையசைத்து செல்லவிருக்கிறார். இதற்கிடையில் மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில் சாமி தரிசனம் செய்யும் திட்டம் ஒன்றையும் தலைமை வைத்திருப்பதாக கூறுகின்றனர். அதுகுறித்து எந்த தகவலும் இன்னும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. கோவில் தரப்பிலும் அலார்ட் செய்யப்படவில்லை. ஒருவேளை தலைவர் பங்காரு அடிகளாரின் ஓம்சக்தி கோயிலுக்கும் சென்று வந்தால் தொகுதிக்குள் இருக்கும் வன்னிய சமூக மக்களின் வாக்குகளை இன்னுமே கவர முடியும். பொதுத்தேர்தலின் போது பல தொகுதிகளுக்கு தலைவர் செல்லாமலே நாங்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டோம். மதுராந்தகம் தொகுதிக்கு இரண்டு முறை வந்து கிட்டத்தட்ட தலைவர் வெற்றியை உறுதி செய்துவிட்டார். இனி வாக்கு வித்தியாசம் என்னவென்றுதான் பார்க்க வேண்டும்' என உற்சாகமாக பேசுகின்றனர். வட மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் வன்னியர் மக்களின் வாக்குகளை கவர தேர்தல் சமயத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு விசிட் அடிப்பர். விஜய்யும் இப்போது அதே வியூகத்தை கையில் எடுக்க வேண்டுமென நிர்வாகிகள் நினைக்கின்றனர். முதல்வரின் திட்டம் என்னவோ? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/will-cm-vijay-visit-om-sakthi-temple-in-melmaruvathur-whats-the-plan-for-the-madurantakam-roadshow




