தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள ‘ஜில் ஜங் ஜக்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இயக்குநர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் கடந்த 2016ல் ‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் வெளியானது. அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தில் சனந்த், அவினாஷ் ரகுதேவன், நாசர், ராதா ரவி, பகவதி பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விஷால் சந்திரசேகர் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தன. குறிப்பாக ‘ஷுட் த குருவி’ பாடல் வைரலானது. 2020 -ம் ஆண்டில் உலக அளவில் ஏற்படும் பெட்ரோல் தட்டுப்பாட்டால் பொருளாதார தட்டுப்பாட்டில் உலகமே சிக்கிக்கொள்ளும். மனிதர்கள் தான் வாழ சக மனிதனையே சாகடிக்க, நோகடிக்க துணிவார்கள் எனும் கருவை காமெடியாக சொல்லி வந்துள்ள திரைப்படம். இதில் ‘ஜில்’லாக சித்தார்த்தும், ‘ஜங்’காக அவினாஷ் ரகுதேவனும், ‘ஜக்’காக சனந்தும் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இந்தப் படம் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதை இயக்குநர் தீரஜ் வைத்தி அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நகராத பொருளை நிறுத்த முடியாத விசை சந்தித்தபோது. ஜில் ஜங் ஜக் (2016) தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது” என கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/ott/siddharths-jil-jung-juk-film-released-on-ott-after-10-years




