Full artikkel
நேற்று (ஜூன் 21, 2026) நீட் மறுதேர்வு நடைபெற்றது. தேர்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ... > நேற்று நடந்த நீட் மறுதேர்வில் கிட்டத்தட்ட 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். ஆனால், கடந்த மே 3-ம் தேதி நடந்த தேர்வில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. > ரத்து செய்யப்பட்ட தேர்வை விட, நேற்றைய நீட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக இயற்பியல் வினாக்கள் மிக நீளமாகவும், சற்று கடினமாகவும் இருந்ததாம். சில வேதியியல் வினாக்களும் நீளமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நீட்ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்! > நேற்று நீட் மறுதேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெற்றது. இரண்டு நாள் மேற்கு வங்கப் பயணம் முடித்து, இந்தியப் பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்குக் கிட்டத்தட்ட மதியம் 1.15 மணிக்கு வந்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் தான் பயணம் மேற்கொண்டால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்று கருதி, சிறிது நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்திருக்கிறார் மோடி. > நேற்றைய நீட் மறுதேர்வு வினாத்தாளும் டெலிகிராமில் கசிந்தது என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அந்தச் செய்தி போலியானது என்று தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. > நீட் மறுதேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டம் செய்ததாக 24 பேர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு"பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" - பாக்., எச்சரிக்கை > ஐதராபாத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதாக ஒரு மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்வு நடக்கும் மையத்தில் உள்ள கழிவறையின் பிளஷ் டேங்கில் ஜிப் லாக் கவரில் மொபைல் போனை ஒளித்து வைத்திருக்கிறார் அந்த மாணவர். தேர்வின் இடையில் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி, கழிவறையைப் பயன்படுத்தி இருக்கிறார். அப்போதுதான், அவர் பிடிப்பட்டிருக்கிறார். இப்படி பல மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் நேற்றைய தேர்வில் பிடிபட்டிருக்கின்றனர். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




