சென்னை, சென்னையில் மாநகர பஸ் சேவையை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் நாள்தோறும் 3 ஆயிரத்து 600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏ.சி. வசதி கொண்ட பஸ் நிறுத்தங்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அந்த வகையில் சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய 4 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஏ.சி.வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்டு 5-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tender-for-construction-of-air-conditioned-bus-stand-at-marina-worth-rs-7840-lakhs




