கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 12 பேர் இன்று காலை நாட்டு நடும் பணிக்காக மினி லாரியில் சென்றுகொண்டிருந்தனர். 4 பேர் பலி பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சாலையில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதியது. இந்த கோர விபத்தில் நடவு பணிக்காக சென்ற 3 பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-accident-kills-4




