திருமலை. திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கோவிந்தராஜ சுவாமி கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திருமலையில் பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 11-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம், 12-ந்தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 16-ந்தேதி பிரம்மோற்சவ கருட சேவை நடைபெறுகிறது. 20-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சக்கர ஸ்நானம் மற்றும் வேதாந்த தேசிகர் சாற்றுமுறை, 21-ந் தேதி பூதத்தாழ்வார் வருஷ திருநட்சத்திரம், 26-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோவிந்தராஜ சுவாமி கோவில் திருப்பதிஜ சுவாமி கோவிலில் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் சிறப்பு உற்சவங்கள் வருமாறு:- 16,23,30 ஆகிய தேதிகளில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு கோவிந்தராஜ சுவாமி கோவில் நான்கு மாட வீதிகளில் ஆண்டாள் வீதி உலா நடக்கிறது. 9-ந்தேதி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெறும். 2 மற்றும் 29-ந் தேதிகளில் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ருக்மணி, சத்தியபாமா சமேத பார்த்தசாரதி சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேதாந்த தேசிகர் உற்சவம் மற்றும் சாற்றுமுறை நடைபெறும். 20-ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு பார்வேட்டை உற்சவமும், 26-ந்தேதி பவுர்ணமி கருட சேவையும் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/important-festivals-and-religious-events-at-tirumala-during-october-2026




