இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தி நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் போர் குறித்துப் பேசியுள்ளார். ஈரான் போருக்கு அமெரிக்காவை அழைத்ததே இஸ்ரேல்தான் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெதன்யாகு ஈரான் போர் குறித்து. “நான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஈரானைக் கையாண்டு வருகிறேன். ஈரானை நேரடியாக எதிர்கொள்ள நமது பாதுகாப்பு அமைப்பைச் சம்மதிக்க வைக்க எனக்கு நீண்ட காலம் பிடித்தது. அமெரிக்காவையும் இந்தப் புரிதலுக்குக் கொண்டு வர எனக்குப் பல காலம் தேவைப்பட்டது. ஈரான்'ஹார்முஸில் கண்ணிவெடிகள்' - ஈரானை அமெரிக்கா தாக்கியது ஏன்? ஈரானின் பதிலடி என்ன? அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் நான் கிட்டத்தட்ட ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதால்தான் என்னால் அதைச் சாதிக்க முடிந்தது. ஈரான் இன்னும் அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவில்லை. அதைச் சற்று பின்னுக்குத் தள்ளியுள்ளோம். அவ்வளவுதான். ஆனால் அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்காகத் தங்கள் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கவே ஈரான் விரும்புகிறது. எனவே, அச்சுறுத்தல் இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. புற்றுநோயை வேரோடு அழிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என்பது உங்களுக்கே தெரியும். அதைத்தான் செய்தோம். ஆனால், புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். அப்படிப் பரவினால், அது மீண்டும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம். ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க விரும்புகிறது. நான் பிரதமராக இருக்கும் வரை அவர்கள் அதைச் செய்யாமல் மீண்டும் தடுத்துக்கொண்டேதான் இருப்பேன்” என்று பேசியுள்ளார். நேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/netanyahu-says-iran-nuclear-threat-has-not-been-eliminated




