புதுடெல்லி, நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காணாமல் போனவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “நேபாள வெள்ளப் பேரிடர் குறித்து மத்திய வெளியுறவு செயலாளர், வெளியுறவு அமைச்சகக் குழு மற்றும் காத்மாண்டு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களின் நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து அறிய அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நேபாள அரசு தரப்புடன் நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/flood-impact-in-nepal-union-minister-jaishankar-holds-urgent-consultation




