நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது. இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். இதையடுத்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தார் திருமாவளவன். இந்தச் சந்திப்பு ஏன் என்பது குறித்த திருமாவளவனின் அறிக்கை. “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். திருமாவளவன்தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது. நன்றி தெரிவித்தோம்! 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். நன்றி தெரிவித்தோம்! தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தித் தீர்மானம் கொண்டுவந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். தீர்மானங்களை வழங்கினோம் அதேபோல நாடாளுமன்றத் தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக்காட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம்! தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்துத் தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்திருக்கிறோம். நாடாளுமன்றம்நெருங்கும் காலக்கெடு, UK விசா கிடைக்காத தமிழக மாணவர்கள் - கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் அந்தத் தீர்மானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியைத் தமிழ்நாடு அரசு, தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும். சுயாட்சி குரல் வேண்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இந்தக் கோரிக்கை வலுவாகப் பேசப்பட்டது போல் அந்தத் தலைவர்களைத் தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம். தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு, இன உணர்வு அல்ல; பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவதுதான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்றிருக்கிறோம். அந்த வகையில் இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சினைகளையும் முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டுசென்றோம். அமுதன்VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes மேகமலை. அமுதன் பிரச்னை மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை, விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசென்றோம். சீராய்வு மனுவை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அமுதன் படுகொலையில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில், அந்தக் குறிப்பிட்ட வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படை ஒன்றை உருவாக்கிட வேண்டும். அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன்வைத்திருக்கிறோம்.” 'கேரளா அல்லா. இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-meets-vijay-after-vck-tvk-alliance-announcement




