சிவகாசி சிவகாசியில் நடந்த த.வெ.க. கூட்டத்தில், ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியது பற்றி அமைச்சர் கீர்த்தனா அதிரடியாக பதில் அளித்து பேசியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, நான் நான்கு கோடியில் வீடு வாங்கியிருக்கிறேன் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பத்திரத்தை யார் கொண்டு வந்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக வழங்குகிறேன் என்றார். இதுபற்றி அவர் பேசும்போது, ஒருவர் ரூ.நான்கு கோடியில் வீடு வாங்கிட்டாங்க. என பேசி நிறுத்தி விட்டு, ரூ.நான்கு கோடி வீடு. எனக்கே அது தெரியவில்லை. பத்திரம் அதனால், இந்த தகவலை யாரெல்லாம் வந்து வெளியிட்டார்களோ, அவர்களுக்கு நான் சொல்கிறேன். அந்த ரூ.நான்கு கோடி வீட்டை. ரூ.நான்கு கோடி வீட்டுக்கான அந்த பத்திரத்தை யார் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அதனை நான் பரிசாக கொடுத்து விடுகிறேன். அன்பளிப்பாக கொடுத்து விடுகிறேன் என்று கூறி சற்று நிறுத்தினார். பின்னர் அவர், முடியலங்க. நாங்க மக்களுக்காக செய்ய வந்திருக்கோம். தேவையில்லாமல் போட்டு எரிச்சலா இருக்கு. இது எதுக்கு? மக்களுக்கு தெரியும். நீங்க என்ன பொய் கூறினாலும், அவர்களுக்கு தெரியும். யார் நல்லது பண்றா? யாரு கெட்டது பண்றா? என்று இந்த கூட்டத்தில் இருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் தெரியும். கூட்டத்திற்கு வந்துள்ள பெண்கள் நீங்கள்தான் இனிமேல் சென்று, அறியாமையில் ஒரு சில பேர் இருக்கிறார்கள். அந்த அறியாமையில் இருக்கிற மக்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். அந்த பொறுப்பை அண்ணன் விஜய் உங்கள் எல்லோருக்கும் தந்துள்ளார் என்று பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/did-she-buy-rs-4-crore-house-minister-keerthana-gives-bold-reply



