சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, ``சட்டமன்றத்தேர்தலில் எனக்கு பிரசாரத்துக்கு 5 நிமிடம் மட்டுமே போதுமானதாக இருந்தது. தளபதி விஜய் என் தொகுதிக்கு வந்தவுடனே கொத்துபரோட்டா போட்டுவிட்டார். என் வெற்றி உறுதியாகிவிட்டது. அனைத்தும் முடிந்துவிட்டன. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் என்ன, அவரின் அப்பா கலைஞர் போட்டியிட்டிருந்தாலும் நான்தான் வென்றிருப்பேன். உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பற்றியும், எடப்பாடியைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். இனி இவர்கள் வெற்றிபெற வாய்ப்பே இல்லை. தேரவே மாட்டார்கள். இனி இரு கட்சிகளும் கிடையாது. ஒரே கட்சி தவெக-தான். முதல்வர் விஜய் பேசாமல் இருந்தால் பேசாமலே இருக்கிறார் என்கிறார்கள். பேசினால் ஓடிவிடுகிறார்கள். அவர் என்னதான் செய்வது. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருக்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு பூஜ்யம். அடிக்கடி அவையிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக ராஜினாமா செய்துவிட்டுச் செல்வது நல்லது" எனப் பேசியிருக்கிறார். "மறைக்கத் தேவையில்லை; நம் தோல்விக்கு நிர்வாகிகளும் காரணம்; அதனால் தான்." - ஸ்டாலின் ஓப்பன் டாக் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/even-if-kalaignar-himselfnot-just-stalinhad-contested-i-would-have-won-mla-vs-babu



