கடந்த மே மாதம், அமெரிக்காவில் அதானி மற்றும் அதானி குழுமத்தின் மீது தொடர்ந்திருந்த மொத்த வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரியது அமெரிக்க நீதித் துறை. இந்த வழக்குகள் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் காலத்தில் தொடுக்கப்பட்டவை. வழக்கை திடீர் என்று தள்ளுபடி செய்ய அமெரிக்க நீதித் துறை கேட்டதால், ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. இதனால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய சொல்வது ஏன் என்கிற கேள்வியை முன்வைத்தார் அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ். அதானி'தலைமைச் செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது' - வானதி சீனிவாசன் காட்டம் இதற்குப் பதிலளித்து அமெரிக்க நீதித் துறை சமர்ப்பித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. "இந்த வழக்கை ஒரு வருடத்திற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அல்லது ஆரம்பத்திலேயே இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கவே கூடாது. வழக்கை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்வதற்கான துறையின் முடிவை மறுபரிசீலனை செய்வதில், நீதிமன்றத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அதிகாரம் மட்டுமே உள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகை என்பது வெறும் பெயரைக் கெடுத்து அசிங்கப்படுத்தும் ஒரு செயல்தான். இதை நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்வதற்கான எவ்வித நடைமுறை சாத்தியக்கூறுகளும் இல்லை. இதில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் நடக்கவில்லை. அதுமட்டுமன்றி, இதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகளில் முதலீட்டாளர்கள் ஒரு பைசாவைக் கூட இழக்கவில்லை. இந்த பங்குச்சந்தை சார்ந்த (Securities) குற்றச்சாட்டுகளுக்குச் முறையான சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை; அதுமட்டுமன்றி, இதுபோன்ற விவகாரங்களில் அமெரிக்கா 'உலக போலீஸ்' போலச் செயல்படக் கூடாது." "திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்." - அமைச்சர் நிர்மல் குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/business/us-doj-says-adani-case-should-never-have-been-filed



