சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக வெளியிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: - தற்போதைய தலைமைச் செயலகத்தில் கடுமையான இட நெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருவது உண்மைதான். இருப்பினும், நீண்டகாலக் கட்டுமானம் என்பதால், இதுபோன்ற விவகாரங்களில் அரசு அவசர கதியில் எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. பட்டினப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள், புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. அவர்களின் குரலுக்கும் அரசு செவி சாய்க்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-cpm-strongly-opposes




