தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளா மட்டும் அல்லாமல் வட மாநிலங்களான குஜராத், மராட்டியம், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. அதை தொடர்ந்து தற்போது டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மின்னல் தாக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் மயூரி விஹாரில் 10 செ.மீ., லோதி சாலை யில் 8 செ.மீ., சப்தர்ஜங் பகுதியில் 7.26 செ.மீ. மழை பாதிவானது. ரோஹினியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரி ழந்தனர். டெல்லிக்கு அருகில் உள்ள அரியானாவின் குருகிராம் நகரிலும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/torrential-rains-lash-northern-states-delhi-reels-under-floods




