மும்பை, மராட்டிய மாநிலம் அமராவதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது. இந்த பிரிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் வென்டிலேட்டர் வசதியுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்து இந்நிலையில், 39 பச்சிளம் குழந்தைகள் இருந்த அந்த அறையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வென்டிலேட்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 குழந்தைகள் பலி இந்த தீ விபத்தில் அறையில் இருந்த பச்சிளம் குழந்தைகள் சிக்கிக்கொண்டன. இதையடுத்து விரைந்து செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள், பச்சிளம் குழந்தைகளை மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் தீக்காயம், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும், 6 குழந்தைகள் படுகாயமடைந்தன. இதையடுத்து, படுகாயமடைந்த 6 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-hospital-fire-3-infants-killed




